fbpx
Homeபிற செய்திகள்ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்மபுரி மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது, தலைமை அமைப்பின் மாவட்ட தலைவர் பழனியப்பன் வரவேற்றார்.

புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கிய 11 சதவீத அகவிலைப் படியை தமிழகஅரசு ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தரப் பணியிடம் வேண்டும்.

101 அரசாணையை ரத்து செய்து பழையபடி தொடக்கக் கல்வியை சுதந்திரமாக செயல்படவும் மீண்டும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பதவியை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு மாவட்டம் தோறும் தேங்கியுள்ள தேர்வுநிலை / சிறப்பு நிலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளர் திருக்குமரன், மாநிலபொதுச் செயலாளர் இராதாஸ், மாநிலதலைவர்லட்சுமிபதி, மாநில துணைத் தலைவர் சிவகுமார், மாவட்ட பொருளாளர் ராமன், நல்லம்பள்ளி வட்டாரச்செயலாளர் ஆறுமுகம், பாலக்கோடு வட்டார பொருளாளர் தியாகராஜன், காரிமங்கலம் வட்டாரத் தலைவர் மாரிமுத்து, பாலக்கோடு வட்டார செயலாளர் பெஞ்சமின், மாவட்ட பொருளாளர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நல்லம்பள்ளி வட்டாரத் தலைவர் இன்பசேகரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img