இந்தியாவில் உள்ள முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக் ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆக்ஸிஸ் ஈக்குவிட்டி ஈடிஎஃப்கள் ETFs FoF (உள்நாட்டு ஈக்குவிட்டி ETF -களின் யூனிட்களில் முதலீடு செய்யும் ஓபன் எண்டெட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம்) தொடங்குவதாக அறிவித்தது.
புதிய நிதியை நிதி மேலாளர் ஷ்ரேயாஷ் தேவல்கர் நிர்வகிப்பார். குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ.5000 மற்றும் முதலீட்டாளர்கள் ரூ.1 இன் மடங்குகளில் முத லீடு செய்யலாம்.
புதிய ஃபண்ட் நிஃப்டி 500 டிஆர்ஐ பெஞ்ச்மார்க்கைக் கண்காணிக்கும். தவிர, நிதி மேலாளரின் டாப் டவுன் முதலீட்டு பார்வையின் அடிப்படையில் உள்நாட்டு ஈக்குவிட்டி ஈடிஎஃப்களில் முதலீடு செய்வதன் மூலம் ஆல்பாவை உருவாக்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிஎஃப் நிதிகள் செயலற்ற உத்திகளில் முதலீடு செய்ய உதவும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். ஆக்ஸிஸ் ஏஎம்சியின் எம்டி மற்றும் சிஇஓ சந்திரேஷ் நிகம் பேசும் போது, செயலற்ற முதலீட் டின் திறமையான குறைந்த விலை உத்திகள், ஒரு குறிப்பிட்ட குறியீட்டை முடிந்தவரை நெருக்கமாகக் கண்காணிக்கும்.
அதே வேளையில், பரந்த சந்தை ஞானத்தை நம்பியிருப்பது, முதலீட்டாளர்களிடையே அதன் முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கு சில முக் கிய காரணங்களாகும்.
அதன்படி, ஆக்ஸிஸ் ETFs FoF- ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், மார்க்கெட் கேப் மே லாண்மை மற்றும் துறை சார், கருப்பொருள் மேலாண்மை ஆகியவற்றை நாங்கள் தடையின்றி ஒருங்கிணைத்து வருகிறோம்.
இதன் மூலம் செயலற்ற உத்திகளின் செய லில் மேலாண்மையை செயல்படுத்துகிறோம். புதிய திட்டத்தின் அணுகுமுறை ‘பொறுப்பான முத லீடு’ என்ற எங்கள் தத்துவத்துடன் ஒத்துப் போகிறது.
அதோடு, எங்கள் தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவில் குறிப்பிடத்தக்க முக்கியத் துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
என்எஃப்ஓ பிப். 4 சந்தாவிற்கு திறக்கப்பட்டு 18 அன்று முடிவடையும்.



