fbpx
Homeபிற செய்திகள்ஆகஸ்ட் 31ஆம் தேதி 40 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்

ஆகஸ்ட் 31ஆம் தேதி 40 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளும் 2021-2022 ஆம் கல்வி யாண்டில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40ச தவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கொரோனா தொற்று தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடைபெறவில்லை.

இந்நிலையில் 2021-2022 கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிப்பதாகவும் மாணவர்களின் பெற்றோரை அதிக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.

இது தொடர் பாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் கல்விக்க ட்டணம் 31.08.21 முடிய 40 சதவீதமும், அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 29.02.2021 முடிய 35 சதவீதம் என 75 சதவீதம் கல்விக் கட்டணம் மட்டும் வசூலித்துக் கொள்ள நீதி மன்றத்தில் இடைக்கால தீர்ப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறை கடிதத்தில் 2021-2022ஆம் ஆண்டுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் 31.08.2021 முடிய 40 சதவீதம் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்துக் கொள்ளவும், பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்கு 35 சதவீதம் வசூலித்துக் கொள்ளவும் மீதமுள்ள 25 சதவீதம் கல்விக் கட்டணம் குறித்து அப்போதுள்ள சூழ்நிலையை பொருத்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சுயநிதிப் பள்ளிகளும் 2021-2022 கல்வியாண்டில் 31.08.2021 முடிய 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை தவிர்த்து காலணிகள், சீருடைகள், வாகனங்கள் போன்ற இதர கட்டணங்கள் ஏதும் வசூலித்தல் கூடாது என தெரிவிக்கப்படடுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img