மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், பெரியகுளத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதிக்கு தேனி பாராளுமன்ற உறுப் பினர் ரவீந்திரநாத் நிதி ரூ.10 லட்சத்தில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதனை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வட்டார வள ர்ச்சி அலுவலர் கதிரவன், ஊராட்சி செயலாளர் போஸ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகு ராஜா, முன்னாள் சேர்மன் ராம்குமார், வக்கீல் ராஜ் குமார், வளைய பட்டி மனோகரன் ,கிளைச் செயலாளர்கள் சக்கரவா ளம், மேட்டுப்பட்டி மதுரை வீரன், அய்யூர் நடராசன், பெரிய இலந்தைகுளம் செல்வம், கோவிலூர் ஜெகதீசன், பாண்டு, தாமரைபாரி, ஒன்றியக் கவுன்சிலர் ரே வதி அலங்காநல்லூர் கவுன்சிலர் நாட்டாமை சுந்தர் உள்பட பலர் பங் கேற்றனர்.



