அழகு பெரிதல்ல அறிவு, உணர்ச்சி இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். அதுதான் படித்துப் பட்டம் பெறும் இந்த தலைமுறை யினருக்கு சிறந்தது என்று இ.சா.பர்வீன் சுல்தானா பேசினார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனமும், சென்னை வானவில் பண்பாட்டு மையம், சென்னை தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் பாரதியார் 100 என்னும் பொருண்மையில், பாரதியார் நூற்றாண்டு விழா, அவினாசிலிங்கம் பல்கலை. வளாகத்தில் நடந்தது.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன், தலைமை தாங்கி பேசும்போது, பெண்களுக்காக மட் டுமே உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் பேசும்போது, பெண்ணைப் போற்றுதல்வாய் வார்த்தையாக இருக்கக் கூடாது.
120 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பெண்ணை ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். பார்வதி தேவியின் அம்சமாகத்தான் இந்த நாட்டில் பெண்கள் அனைவரையும் இமயமலை பெற்றெடுத்த பாரததேவியாகத்தான் பாரதியார் பார்த்தார். தாயின் வயதைக் கூறிவிட முடியாது. அத்தகைய பழமை வாய்ந்தவர் தான் பாரததேவி என்றார்.
சென்னை நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேரா சிரியர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, வல்லமை தாராயோ எனும் தலைப்பில் பேசியதாவது:
பாரதி 100 என்பது அவர் இறந்த பிறகும் நூறு ஆண்டுகள் அதற்கு மேலும் வாழ்ந்து கொண்டிருப் பவர் என்பதைக் குறிக்கிறது. பேச்சிற் காகவோ பட்டத்திற்காகவோ இல்லாமல் மன எழுச்சிக்காகவே பாரதியாரின் கவிதைகளை நான் படித்தேன்.
உண்மையான பெண் விடுதலையை விரும்பியவன் பாரதி. கல்வி என்பதே கேள்வி கேட் பது தான். அச்சமும் நாணமும் வேண்டாம். ஞானம், நல்லறம் வீரம், சுதந்திரம் இவையே பெண்களின் நற்குணங்கள் என்றார். 8000 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு பெண்கள் இந்நிலையை அடைந்துள் ளனர். சிந்தனை என்பது பெண்களின் பிறப்புரிமை.
சுதந்திரத்தை அடுத்த தலை முறைக்கு கடத்த வேண்டும். சாதிய விடுதலை கிடைத்துவிட்டால், அது பெண்களுக்கான விடுதலை தான். அன்பைப் போல பேராயுதம் கிடையாது. சொல்லில் கவனம் வையுங்கள். உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அன்பாக ஆரோக்கியமாக இருப்பதே சிறந்தது. அழகு பெரிதல்ல அறிவு, உணர்ச்சி இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். அதுதான் படித்துப் பட்டம் பெறும் இந்த தலைமுறையினருக்கு சிறந்தது என்றார்.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத் தின் துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கவிஞர் கே.ரவி, பாரதியே ஒரு பல்கலைக்கழகம் தான். பெண்களுக்காக ஓங்கி ஒலித்த முதல் குரல் அவருடையதுதான்.
பெண்களுள் ஒருவனாய் பாரதி இருந்தான். விதவைத் திருமணத்திற்கு எதிராக ஒலித்த காந்தியடிகள், விவே கானந்தர் கருத்துகளை எதிர்த்தார். பெண்களுக்கான முதல் இதழான சக்கரவர்த்தினியை பாரதியார் தொடங்கினார் என்று பேசினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.கலாவதி வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.குரு ஞானம்பிகா நன்றி கூறினார்.



