அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற் படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோ தாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவப் படிப்பை தொடர்ந்து அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு 7.5% இடஒதுக்கீடு. 3.45 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் உயர்நிலை வகுப்புகளில் படிக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறி இருந்தார்.
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தீர்வு களை பரிந்துரைகளை செய்திடவும், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஆணை யத்தின் அறிக்கை பெறப் பட்டது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது என்று கடந்த 4 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை சட்ட மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதாவை சட்டப்பேர வையில் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள் பாதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமுன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தி மாண் புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
பல்வேறு சமூகப் பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைத்து மாணவர்க ளுக்கும் உயர்கல்வி பெறுவதில் சமவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.
ஏற்கெனவே, அரசுப் பள்ளியில் படித்த மாணாக் கர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பலவ கையான பள்ளிகளில் ஏறக்குறைய 1.3 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2019-2020 கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 8.5 இலட்சம் ஆகும்.
அவர்களுள் 3.45 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவார்கள். பொறியியல் கல்வியில், 2020&2021 கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83 விழுக்காடு ஆகும்.
இதேபோன்று, அரசுப் பொறியியல் கல்லூரிகளில் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முறையே, 6.31 விழுக்காடு மற்றும் 0.44 விழுக்காடு மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிட்டு சேர்க்கை பெறுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஏழ்மை நிலை, அறியாமை, போதிய வழிகாட்டுதல் இன்மை காரணமாக, அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர் களின் பெற்றோர்கள் தொழிற்கல்விப் படிப்புகள் குறித்த விழிப்புணர்வினைக் குறைவாகப் பெற்றுள்ளனர்.
எனவே இதனை நன்கு ஆய்வுசெய்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தி றனை மேம்படுத்த பல தீர்வுகளைப் பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல், தொழிற்கல்விப் படிப்புக ளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக் காட்டிற்குக் குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என ஆணையம் பரிந்து ரைத்துள்ளது.
ஏற்கனவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை வழங்கியுள்ளது போல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்ப டையில் ஒதுக்கீடு செய்யப் படுதல் வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு, அதற் கான சட்டமுன்வடிவு இந்த அவையிலே கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழக்கும் சட்ட மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி; தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக ஆதரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.



