fbpx
Homeபிற செய்திகள்அரசுகளின் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 15,369 வீடுகள் கட்டி முடிப்பு- அமைச்சர்...

அரசுகளின் மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 15,369 வீடுகள் கட்டி முடிப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

தாங்களாகவே வீடுகள் கட்டும் திட்டத்தில், நகர்ப்புறங்களில் நில உரிமம் வைத்துள்ள வீடற்ற ஏழைகளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன், கோவை மாவட்ட த்தில் இதுவரை 18,795 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, 15,369 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி உக்கடம் குடிசை மாற்றுவாரிய திட்டப்பகுதி, டோபிகாலனி உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (மே 5)பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் உள்ள ஆட்சேபகரமான அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும், வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கும் அரசு நிலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின், மானியத்துடன் பயனா ளிகளின் பங்களிப்புடனும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

31-ம் தேதிக்குள்
இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரையில் 7 திட்டப்பகுதிகளில் 1441 வீடுகள் ரூ.122.64 கோடி செலவினத்தில் கட்டி முடிக்கப்பட்டு, 1248 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 1173 குடியிருப்புகள் ஒப்படை க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 268 குடியிரு ப்புகளுக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளிடம் பங்கு தொகை வசூலிக்கப்பட்டு வரும் 31-ம் தேதிக்குள் ஒப்படைக்கப்படும்.

இத்திட்டத்தில் 16 திட்டப்பகுதிகளில் உள்ள 608 குடியிருப்புகள் இம்மாத இறுதிக்குள் 31-ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்படாமல் உள்ள 672 குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் துவக்கப்படும். மேற்கண்ட திட்டப்பகுதிகளில் பயனாளிகளின் பங்குத் தொகை செலுத்த மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் லோன் மேளா நடத்தி, வங்கிகளின் மூலம் கடன் வழங்க உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.2.10 லட்சம் மானியம்
பயனாளிகள் தாங்கள £கவே வீடுகள் கட்டும் திட்டத்தில் நகர்ப்புறங்களில் நில உரிமம் வைத்துள்ள வீடற்ற ஏழைகளுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன் 400 சதுர அடி பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ள ரூ.2.10 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தில் இதுவரை 18,795 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, 15,369 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பணி முன்னேற்றத்தில் உள்ள 2105 வீடுகள் வரும் 31-ம் தேதிக்குள் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்தில் 1350 புதிய வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்படவுள்ளது.

‘நம் குடியிருப்பு – நம் பொறுப்பு’
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களில் கட்டப்பட்டுள்ள அடுக் குமாடி குடியிருப்புகளை பயன £ளிகளின் பங்கேற்புடன் பராமரிக்க முதல்வர், ‘நம் குடியிருப்பு – நம் பொறுப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இத்திட்டத்தில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஏற்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு களை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கெ £ள்ளப்படும். இதற்கு 50 விழுக்காடு அரசாலும், 50 விழுக்காடு குடியிருப்போர் நலச்சங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதுவரை இக்கோட்டத்தில் 8 குடியிருப்போர் நலச்சங்கங்கள் துவங்கப் பட்டு சங்கங்களை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 10 திட்டப்பகுதிகளில் சங்கங்கள் துவக்கப் படுவதற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட நிலையிலான அலுவல ர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியிருக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தடையில்லா குடிநீர், தெருவிளக்கு மற்றும் குடும்ப அட்டைகள் மாற்றம் உள்ளிட்டவற்றினை உறுதி செய்திட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைமை பொறியாளர் ராஜசேகரன், கண்காணிப்பு பொறியாளர் நஞ்சப்பன், செயற்பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img