fbpx
Homeபிற செய்திகள்அண்ணா பல்கலைகழக கிரிக்கெட் போட்டி: கேபிஆர் பொறியியல் கல்லூரி அணி வெற்றி

அண்ணா பல்கலைகழக கிரிக்கெட் போட்டி: கேபிஆர் பொறியியல் கல்லூரி அணி வெற்றி

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டுவரும் யுனைடெட் தொழில்நுட்ப கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் 9, 10 மற்றும் 11 வது மண்டல கல்லூரி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.

இதன் இறுதிப் போட்டி யில் கேபிஆர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அணி, ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கேபிஆர் ஐஇடி அணி 10 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தது தொடர்ந்து விளையாடிய எஸ்ஆர்ஐடி அணியினர் 70 ரன்கள் எடுத்திருந்தது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி அணி மற்றும் அண்ணா பல்கலை மண்டல அணி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு யுனை டெட் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் ராம்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்றவருக்கு பரிசுகளை வழங்கினார்.

இத்தகவலை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்

படிக்க வேண்டும்

spot_img