fbpx
Homeபிற செய்திகள்அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து சர்வம் பவுண்டேஷன் நடத்திய சிறப்பு கண் சிகிச்சை முகாம்

அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து சர்வம் பவுண்டேஷன் நடத்திய சிறப்பு கண் சிகிச்சை முகாம்

கோவை காந்திபுரம் ராமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வம் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை சர்வம் பவுண்டேஷன் செந்தில்நாதன் மற்றும் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சம்பத் துவக்கி வைத்தனர்.

சர்வம் பவுண்டேஷன் சார்பில் தெரிவிக்கையில், கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு கண் சிகிச்சை முகாமை ஆரம்பித்துள்ளோம்.

சர்வம் பவுண்டேஷன் கொரோனா காலங்களில் மக்களுக்கு பல்வேறு விதமான உதவி களைச் செய்து வந்திருக்கிறது.

கண் சிகிச்சை மட்டுமல்லாமல் பொது மருத்து வம், இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் போன்ற முகாம்களை நடத்தி இருக்கிறது என்றனர்.

இந்த முகாமில் காந்திபுரம் பகுதி திமுக தலைவர் சாமி, மகளிரணி மஞ்சு பிரியா, கண்ணம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img