fbpx
Homeபிற செய்திகள்பருத்தி கொள்முதல் விதிமுறை மாற்றத்தால் விலை சரிவு: மத்திய அரசுக்கு சைமா பாராட்டு

பருத்தி கொள்முதல் விதிமுறை மாற்றத்தால் விலை சரிவு: மத்திய அரசுக்கு சைமா பாராட்டு

பருத்தி கொள் முதல் செய்யும் நிறு வனங்களுக்கான விதிமு றைகளில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதனால், பருத்தி விலை சரியத் துவங்கியது.
இதற்காக மத்திய அரசுக்கு சைமா பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னிந் திய பஞ்சாலைகளின் சங்கத் (சைமா) தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பருத்தி ஜவுளி சங்கிலியில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில், தேவையான மாற்றங்களைக் கொண்டுவர “செபி” மற்றும் “எம்சிஎக்ஸ்” நிறுவனங்களுக்கு உத்தர விட்டு, அதன் மூலம் ஜவுளித்துறையை நம்பி அதில் நேரடியாக பணி புரியும் 35 மில்லியன் மக்களும், 6.5 மில்லியன் பருத்தி விவசாயிகளும் பயனடையும் வண்ணம் மேற்கொண்ட முயற்சிக ளுக்கு, மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனால் பருத்தி விலை குறைந் துள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை ரூ.50 ஆயிரம் ஆக இருந்த 170 கிலோ எடை கொண்ட ஒரு பேல் பஞ்சின் விலை தற்போது 27 சதவீதம் குறைந்து ரூ.36.480 ஆக உள்ளது.

புதிய பருத்தி முன்னரே சந்தைக்கு வந்துவிட்டதா லும், விலை அழுத்தத்தின் காரணமாகவும், பருத்தி யின் விலை கண்டி ஒன் றுக்கு ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.90 ஆயிரம் ஆக குறைந்துவிட்டது.
இது பத்து சதவீதம் குறைவு.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பருத்தியின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகம்.

இந்திய பருத்தி ஜவுளித்தொழில் நெருக்க டியில் இருந்து மீண்டு வருவதற்கு, உள்நாட்டு பருத்தி விலையும், சர்வ தேச பருத்தி விலையும் போட்டியிடும் நாடுகளில் நிலவும் விலையுடன் ஒத் துப்போக வேண்டும்.

மத்திய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
பருவத்தில் எதிர்பார்க்கப்படும் பருத்தி விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருக்கும்.

அதனால் இறக்கு மதி வரி நீக்கம் பருத்தி விவசாயிகளை பாதிக்காது.
ஊக வணிகத்தை கட்டுப்படுத்தி, பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்குவதன் மூலம், மூலப்பொருள் பாதுகாப் பை உறுதி செய்யவும், சர்வதேச அளவில் நமது ஜவுளித் துறையினர் போட்டியிட ஏற்ற வகையில் தரமான பருத்தி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img