கோவையில் கொரோனா குறைந்தது. கோவையில் உள்ள அனைத்து கோர்ட்டுக ளிலும், மீண்டும் நேற்று முதல் நேரடி விசாரணை துவங்கியது.
கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு காரணமாக, ஜன., 3 முதல், நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்ததால், அனைத்து துறையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனால் நீதிமன்றங்களில், நேரடி விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில், நேற்று நேரடி விசாரணை நடத்தப் பட்டது.
வக்கீல்கள் நேரடி யாக கோர்ட்டில் ஆஜராகி வாதாடினர். கொரோனா பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல், கை கழுவுதல் ஆகிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.
வக்கீல் சங்கம் மற்றும் சேம்பர் திறக்கப்பட்டு வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் கூடுவதை தவிர்க்க, கோர்ட்டு வளாக கேன்டீன் மூடப்பட்டது.



