Homeபிற செய்திகள்எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ள எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் சென்னையை சேர்ந்த வீல்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி திவாகர் மாணவரிடம் நேர்காணலை நடத்தினார்.எம்.ஆர்.கே. பொறியியல் கல்லூரியில் இசிஇ, இஇஇ, மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த 46 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் எம். ஆர்.கே.பி.கதிரவன் வாழ்த்துகளை தெரிவித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்தவேலு உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img