சமைப்பதில் ஆர்வமும், சமைத்து சுவைத்து பார்ப்பதில் விருப்பமும் கொண்டவரா நீங்கள்… ஆனால், அதே சுவை, மணத்துடன் சமைக்க போராடி வருகிறீர்களா ? டில்லி சோலே அல்லது பஞ்சாபி பட்டர் சிக்கன் போன்ற வகைகளை அசல் மணம், சுவைகளை அள் ளித்தர புதிய அன்னபூர்ணா மசாலா கை கொடுக்கிறது.
சிறிய நகரங் கள் முதல் மாநிலங்கள் வரை அந்தந்த பகுதி உணவு வகைகளை உங்களது கை பக்குவத்தில் தயார் செய்ய பகுதி வாரியான மசாலா வகைகள் பெரிதும் உதவுகிறது.
ஹைதராபாத் பிரியாணி மசாலா, ஆம்பூர் பிரியாணி மசாலா, திண்டுக்கல் பிரியாணி மசாலா, லக்னோ சிக்கன் டிக்கா மசாலா, மும்பை பாவ் பாஜி மசாலா, டில்லி பனீர்பட்டர் மசாலா, காஷ்மீரி டம் ஆலு மசாலா, டில்லி சோலே மசாலா, நாடன் கோழி ரோஸ்ட் மசாலா, பஞ்சாபி பட்டர் சிக்கன் மசாலா, மங்களூர் சிக்கன் மசாலா, செட்டிநாடு மிளகு கோழி வறுவல் மசாலா, மதுரை ஆட்டுக்கறி சுக்கா மசாலா, ஆந்திரா கோடி வேப்புடு மசாலா மற்றும் ஹைதராபாத் சமி கபாப் மசலீலா வரை புதிய அன்னபூர்ணா மசாலா வகைகள் 80 கிராம் பாக்கெட்டுகளை கொண்ட பெட்டியாக கிடைக்கும்.
புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசாலா, பாக்கெட் 80 ரூபாயிலிருந்து, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் முதல் சிறிய கடைகள் வரை அந்தந்த மாநிலங்களில் கிடைக்கும்.
அன்னபூர்ணாவின் மண்டல அளவிலான மசாலா கலவைகள், மண்டல அளவிலான போட்டியில் பெயர் பெற களம் இறங்கியுள்ளது. புதிய வகை மசாலாக்கள் குறித்து அன்னபூர்ணா மசாலாக்கள் மற்றும் வாசனை திரவியங்கள் செயல் இயக்குனர் விஜய் பிரசாத் கூறியதாவது:
மண்டல அளவிலான இந்திய உணவு வகைகள், உலகிலேயே மிகவும் சுவையா னவை, செரிவுமிக்கவை, பல வகைப்பட்டவை. இதே போன்று பிரதியாக சமைப்பது கடினமானது. உள்ளூர் சமை யலும் மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். அன்னபூர்ணா துவக்கப்பட்ட 1975ம் ஆண்டிலிருந்துனா வாடிக்கையாளர்களின் சுவையையும், அவர்களது விருப்பத்தையும் அறிந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது வாடிக்கையாளர் கள், பாரம்பரிய உணவு வகை களை மீண்டும் பார்வையிட்டு அவற்றை அந்தந்த மண்டல ரீதியான சுவையில் சமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இத்தகைய மசாலா கலவைகளுக்கு மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் கருவாக, அன்ன பூர்ணா வெற்றிபெற மாபெரும் மிக முக்கியமான திட்டத்தை கொண்டுள்ளது. இதன் தயாரிப்புகள், இந்திய பாரம்பரிய முறைப்படி, இந்திய வாசனை திரவியங்களை நன்கு அறிந்து, துல்லியமான கலவையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சந்தையில் பல புதிய மசாலா தயாரிப்புகள் வந்தபோதும், கடந்த 40 ஆண்டுகளாக நிலைத்த பெயர் பெற்ற மசாலாவாக திகழ இதன் தயாரிப்பு முறை கள் தான் காரணம். இந்த நிறுவனத்தின் 30,000 சதுரடி உற்பத்தி தொழிற்சாலை கோவை யில் அமைந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 35 மெட்ரிக் டன் தயாரிக்கும் திறன் கொள்ளளவு கொண்டுள்ளது. தீவிரமான வளர்ச்சி திட்டங்களுடன், அனைத்து வசதிகளுடன், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவையும் கொண் டுள்ளது.