fbpx
Homeபிற செய்திகள்ஜாக் ஜூவல்ஸ் சார்பில் சென்னையில் 3 நாள் நகை கண்காட்சி நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய...

ஜாக் ஜூவல்ஸ் சார்பில் சென்னையில் 3 நாள் நகை கண்காட்சி நாடு முழுவதும் சேகரிக்கப்பட்ட பாரம்பரிய நகைகளின் அணிவகுப்பு

ஜாக் ஜூவல்ஸ் சார் பில் 145வது ஜூவல் கண்காட்சி சென்னை தாஜ் கோரமண்டலில் கடந்த 20 முதல் 22ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது.
இந்தியர்களுக்கு எப் போதுமே நகைகள் மீது தனி மதிப்பு உண்டு.

அதனால் தான் இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர்களில் ஒன்றாக உள்ளது. ஜாக் (ZAK) ஜூவல்ஸ் இந்தியா முழுவதும் விலை மதிப்பற்ற பிளாட்டினம் தங்கம், வைரம், வெள்ளி நகைகளை 3 நாள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

பாரம்பரிய சேகரிப்பு, பழங்கால சேகரிப்பு, டிசைனர் சேகரிப்பு, சாதாரண சேகரிப்பு, பிரைடல் கலெக்ஷன் என அனைத்து சேகரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

மயக்கும் மீனாகாரி நகைகள், குந்தன் ஆகியவை சிறப்பம்சமாக இடம்பெற்றன.
இந்தியா முழுவதுமி ருந்து 27க்கும் மேற்பட்ட நகைக்கடைக்காரர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.

கொல்கத்தா, சென் னை, ஹைதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர், மும்பை, புதுதில்லி, சூரத் மற்றும் பல இடங்களில் இருந்து காது வளையங்கள், வளையல்கள், நெக்லஸ்கள், முழு செட்டுகள், பெல்ட்கள், பதக்க மோதிரங்கள் உள்ளிட்ட ஆப ரணங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியை நடிகை ரேஷ்மா பசுபு லேட்டி, அன்னபாரதி, மதுரை முத்து ஆகியோர் திறந்துவைத்து முதல் விற் பனையை தொடங்கி வைத்தனர்.
கண்காட்சி குறித்து நிறுவனத்தின் இயக்குநர் சையத் ஜாகீர் அகமது கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக நமது பாரம்பரிய செழுமையை கொண்ட £டும் வகையில் நாட்டின் தலைசிறந்த நகைக்கடை உரிமையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் காலத்திற்கு ஏற்றார்போல் ஒருங்கிணைத்து வெளிப் படுத்துவதில் ஜாக் நிறுவனம் பெருமை கொள்கிறது.

நகை ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நேர்த்தியான கைவினை திறன், வடிவமைப்பு திறமையை விரும்புவோருக்கு இது தவிர்க்க முடியாத கண் காட்சியாக அமைந்தது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img