கோவை குரூப் 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி சார்பாக மாபெரும் விதை பந்து தயாரித்தல் உலக சாதனை நிகழ்வு 2024 அவிநாசி சாலையில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை, கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவா ராவ் துவக்கி வைத்தார். விமானப்படை என்சிசி அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் முன்னிலை வகித்தார். இதன் மதிப்பீட்டு அலுவலர்களாக ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி குரூப் கேப்டன் செந்தில் குமார் மற்றும் கோயமுத்தூர் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் நிர்மலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இது லிம்க்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனைக்காக நடத்தபட்டது. இதில் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவை சேர்ந்த சுமார் 2100 என்சிசி மாணவர்கள் 11 லட்சம் விதைப்பந்துகளை வெறும் இரண்டு மணி நேரத்தில் தயாரித்து உலக சாதனை படைத்தார்கள்.
இந்த விதைப்பந்துகள் வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் சென்று நேரடியாகவும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாகவும் வீசப்படும்.