அருள்தந்தை வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப் பட்ட உலக சமுதாய சேவா சங்கம், ஈரோடு மனவளக்கலை மன்றம் சார்பில் ஜனவரி 1 அன்று உலக அமைதி தின வேள்வி ஈரோடு அறிவுத்திருக்கோயிலில்
துவங்கப்பட்டது.
காலை 6 மணிக்கு உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் பத்மஸ்ரீ எஸ்.கே.எம்.மயிலானந்தன் புத்தாண்டு சிறப்புரையாற்றி வேள்வியைத் துவக்கி வைத்தார். மாலையில் வேள்வியை நிறைவு செய்து முதுநிலை பேராசிரியர் உழவன் மா. தங்கவேலு அஉரையாற்றினார். காலை, மாலை சுமார் 500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.