கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் முதல்வரும் பைக் ஆர்வலருமான முனைவர் கற்பகம் “சாலைகளில் ஏற்படும் வன விலங்கின் விபத்துக்கள் மற்றும் உயிர்கள் பாதுகாப்பு எனும் பொருண்மையில்” வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் முன்னி லையில் விழிப்புணர்வு பயணத்தை மேற் கொண்டார்.
மேலும் அவர் கோவை முதல் கோத் தகிரி வரை தனி ஒரு பெண்ணாக பைக்கில் பயணம் செய்து வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை வழிப்போக்கர்களிடத்திலும் மாணவர்க ளிடத்திலும் ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வானது, சனிக்கிழமை காலை கோவை வன அலுவலகத்திலிருந்து தொடங்கி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இப்பயணத்தில் ஆங்காங்கு இருந்த வன அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் பெரும் ஆதரவினை நல்கி உற்சாகப்படுத்தினார்.