தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரும் மே ஐந்தில் மதுரை யில் அதன் 41வது மாநில மாநாட்டை நடத்துகிறது என்று பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.
அவர் ஈரோடு மாவட்ட பேரமைப்பின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது: மாநில மாநாடு முக் கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது அந் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வருவதற்கு எதிராக நாங்கள் இல்லை. அவர்கள் நேர்மையாக நடக்காத நடக்காததை உதாரணத்துக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என அறிவிக்கின்றனர்.
ஒரு கோதுமை மாவு தயாரிக்கும் நிறுவனம் அதன் ஏராளமான கோதுமை மாவு பொட்டலங்களை விற்பனை செய்ய முடியாமல் இருக் கிறது. அதன் இறுதி தேதி வர உள்ளது. இந்த சமயத்தில் ஒரு கார்ப்ப ரேட் நிறுவனம் அந்த நிறுவனத்திடம் விலை பேசி மொத்தமாக பொருட்களை வாங்கி ஒரு கிலோ 20 ரூபாய் என பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. அதை வாங்கிய விலை ரூபாய் 10. ஆனால் நாங்கள் விற்கும் விலை ரூபாய் 40. பொதுமக்கள் அந்த உணவுப் பொருள் எந்த அளவுக்கு தரமாக இருக்கும் எப்போது அதனுடைய விற்பனை தேதி முடிவடையும் என்றெல்லாம் தெரியாமல் அதிக அளவு வாங்குகின்றனர்.
இவ்வாறு மக்களை ஏமாற்றுவதே தான் நாங்கள் எதிர்க்கி றோம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்குப் பிறகு அழைத்து பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியா கூட்டணி ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் குறித்து பேசுகிறது. ஜிஎஸ்டி ஆறிலிருந்து 10 சதவீதம் வரை இருந்தால் சுமையாக இருக்காது. வணிகர்கள் கணக்குகள் முறையாக பேணி சமர்ப்பிக்க தயாராக உள்ளனர். 2017க்கு முன்பு கணக்குகளை சமர்ப்பித் ததை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அந்த கணக்குகளில் தற்பொழுது குறைகளை கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம்.
எங்கள் வேண்டுகோள் படி தேர்தல் ஆணையம் ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் தேர்தல் முடிந்த பிறகு கொண்டு செல்வது அனுமதித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கிறே. கைப்பற்றப்பட்ட பணத்தையும் முறையாக கணக்கு காண்பித்தவுடன் திருப்பி தரப்பட்டுள்ளது.
மூன்றாண்டு வணிக உரிமம் தர முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும். கட்டிட வரி தொழில் வரி குப்பை வரி என வரிச் சுமையை குறைக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டி கட்டும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. பெறப்படும் ஜி எஸ்டியை முறையாக மாநிலங்களுக்குத் தர வேண்டும். மே 5 வணிகர் தினமாக அரசு அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா கூறினர். பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் சண்முகவேல் ராமச்சந்திரன் உதயம் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.