fbpx
Homeபிற செய்திகள்‘டபிள்யூடி பர்பிள் ப்ரோ ஹார்டு டிஸ்க்’ வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிமுகம்

‘டபிள்யூடி பர்பிள் ப்ரோ ஹார்டு டிஸ்க்’ வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அறிமுகம்

இந்தியாவில் கண்காணிப்பு கேமரா சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் தற்போது கண்காணிப்பு கேமரா மத்திய ஸ்டோரேஜ் வசதிக்காக புதிய 22டிபி டபிள்யூடி பர்பிள் ப்ரோ ஹார்டு டிஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது.

சிசிடிவி கேமராக்களுக்கான ஸ்டோரேஜை தேர்ந்தெடுக்கும்போது, பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்வது அவசியம் ஆகும்.

உதாரணத்திற்கு பலவிதமான பருவநிலைகளுக்கு ஏற்ற சிறந்த மற்றும் அதிக வேலைப்பளு இல்லாத செயல்திறன்மிக்க மற்றும் பராமரிப்புக்கான நினைவூட்டல்களுடன் கூடிய டபிள்யூடி பர்ப்பிள் மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற சிறப்புமிக்க ஸ்டோரேஜ் டிஸ்க்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களின் செயல்திறனை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு சேமிப்பக தீர்வு ஸ்மார்ட் வீடியோ கண்காணிப்பு ஹார்ட் டிஸ்க் டிரைவ்களின் பயன்பாடு ஆகும்.

இந்த சிறப்புவாய்ந்த ஹார்ட் டிஸ்க்குள் 24/7 கண்காணிப்பு மற்றும் படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெஸ்டர்ன் டிஜிட்டலின் டபிள்யூடி பர்பிள் ப்ரோ ஹார்டு டிஸ்க்குகளின், 22டிபி மாடல் உள்ளது. இது 24/7 மல்டி ஸ்ட்ரீம், மல்டி-கேமரா பயன்பாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மத்திய ஸ்டோரேஜுக்கு இதன் புதிய ஹார்டு டிஸ்க்குகளை பயன்படுத்தும் அதே வேளையில் கேமரா ஸ்டோரேஜுக்கு இதன் எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்தும்போது இவை பயனாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. இவை 24/7 மல்டி ஸ்ட்ரீம், மல்டி-கேமரா பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img