fbpx
Homeபிற செய்திகள்சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன மதகுகளில் தண்ணீர் திறப்பு

சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன மதகுகளில் தண்ணீர் திறப்பு

சிதம்பரம் கொள்ளிடம் வடி நில கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின் பேரில், கொள்ளிடம் வடிநில உதவி செயற்பொறியாளர் ரமேஷ் வழிகாட்டுதலின் பேரில், சேத்தியாத்தோப்பு பொதுப்பணித் துறை இளம் பொறியாளர் படைகாத்தான் மேற்பார்வையில், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன பிரிவின் கீழ் அமைந்துள்ள வெள்ளராஜன் மதகு அரிய கோஷ்டி மதகு, மானம் பாத்தான் மதகு, பழைய முரட்டு வாய்க்கால் மதகுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிகழ்வில் அரியகோஷ்டி பாசன சங்க தலைவர் நடராஜன், மானம்பாத்தான் பாசன சங்க தலைவர் சிவசரவணன், பழைய முரட்டு வாய்க்கால் பாசன சங்க தலைவர் தன்ராஜ் மற்றும் பாசன சங்க பொறுப்பாளர்கள் சக்ரவர்த்தி, கீழமணக்குடி கார்த்தி ராதாகிருஷ்ணன், ரவி கோதண்ட ராமன், விஜயன், கருணாமூர்த்தி, சுந்தரவடிவேல், உளுத்தூர் ராஜேந் திரன், சங்கபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாசன மதகுகளை திறந்து வைத்தனர்.


மேலும் அலுவலக பணியாளர்கள் செந்தில், ரமேஷ், லட்சுமணன், புவனகிரி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தண்ணீர் திறப்பின் மூலம் புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுமார் 22,000 ஏக்கர் நிலங்கள் சம்பாசாகுபடி பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img