fbpx
Homeபிற செய்திகள்வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் பாதுகாப்பு வார விழிப்புணர்வு போட்டிகள்

வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் பாதுகாப்பு வார விழிப்புணர்வு போட்டிகள்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 53வது தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

மார்ச் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒரு வாரம் ‘பாதுகாப்பு தலைமையில் கவனம் செலுத்துங்கள்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, சூலோகன் எழுதும் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் துறைமுக ஊழியர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சுசந்த குமார் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துறைமுக ஆணைய போக்குவரத்து மேலாளர் பிரபாகர் வரவேற்புரை வழங்கினார். பாதுகாப்பு துறை துணை இயக்குனர் பிரிஜேந்திர குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சுசந்த குமார் புரோகித் பேசுகையில்,

“துறைமுக செயல்பாடுகளில் பாதுகாப்பும் மற்றும் உற்பத்தி திறனும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. ஒவ்வொரு தனிநபரையும் பாதுகாக்கவும், பூஜ்ஜியம் விபத்துக்கள் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், சரியான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img