திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் கருணாநிதி தலைமை தாங்கினார் .
விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, கல்லூரியின் முதன்மை நிர்வாகிகள் சொக்கலிங்கம், வரதராஜு, முதல்வர்கள் டாக்டர் பேபிஷகிலா, டாக்டர் விஜயகுமார், டாக்டர் தேவி, டாக்டர் ராஜேந்திரன், டாக்டர் சண்முகராஜு, மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் டாக்டர் வெ. மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூன்றாமாண்டு கணினி அறிவியல் தொழில்நுட்ப மாணவி செல்வி ஆலின் ஜெனட் வரவேற் புரை வழங்கினார். வேலை வாய்ப்பு இயக்குனர் டாக்டர் சரவணன் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
இதில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கருணாநிதி தனது தலைமை உரையில் கூறுகையில், “மாணவிகள் தங்களது லட்சியத்தையும் இலக்குகளையும் அடையும் வரை எந்தவித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் தங்க ளுடைய லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்“ என்றார்.