fbpx
Homeபிற செய்திகள்விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை. ‘லா ஸ்கூல்’ புதிய டீன் நியமனம்

விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை. ‘லா ஸ்கூல்’ புதிய டீன் நியமனம்

விநாயகா மிஷன்’ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (நிகர்நிலை பல்கலைக் கழகம்), அதன் லா ஸ்கூலின் புதிய டீன் ஆக பேராசிரியர் (முனைவர்) அனந்த் பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டருக்கிறார்.

டாக்டர் பத்மநாபன், தற்போது ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் ‘‘ஸ்லோன் ஃபெல்லோ’ என்ற பொறுப்பை வகித்து வருகிறார். யுஎஸ்ஏ-வில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லா ஸ்கூலின் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றவர்.

நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா

2017-ல் இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் காலஅளவிற்கு தொழில் தகராறுகள் துறை சார்ந்த வழக்கறிஞராக டாக்டர் பத்மநாபன் பணியாற்றினார்.

அதன் பிறகு, பென்கேரிலா-ல் ஓர் ஆண்டு எல்எல்எம் கல்வித்திட்டத்தை மேற்கொள்ள அவர் முடிவுசெய்தார். 2014-ம் ஆண்டில் அதனை வெற்றிகரமாக முடித்த பிறகு எஸ்ஜேடி கல்வித்திட்டத்தில் பயில்வதற்கு டீன்ஸ் ஸ்காலர்ஷிப் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்த போதும் மற்றும் அவரது எல்எல்எம் கல்வித்திட்ட ஆண்டின்போதும் அவர் பெற்ற வியத்தகு தொழில்நுட்ப சட்ட மற்றும் கொள்கை பயிற் சியினால் குறிப்பிடத்தக்க அளவு ஊக்கம் பெற்ற டாக்டர் பத்மநாபன் புதுடெல்லியில் கார்னகி எண்டோமென்ட் அமைப்புடன் இணைந்து பணி யாற்றினார்.

முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வேடு செயல்திட் டத்தை வெற்றிகரமாக முடித்தபிறகு, ஒரு பல் கலைக்கழக தலைவராக பணியாற்றிய அதே வேளையில் முழுநேர கல்விசார் பணிக்கு தன்னை மாற்றிக்கொண்டார்.

அந்த பயணத்தில் அவர் பெற்ற அனுபவமும், உள்நோக்குகளும், அவரது பயணத்திற்கான இலக்குகளை சிறப்பாக தெளிவு படுத்த அவருக்கு உதவின. அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் மிட்-கேரியர் கல்வித்திட்டத்தில் சேர அவர் முடிவெடுத்தார்.

தொழில்நுட்ப கொள்கை, அறிவுசார் சொத்து உரிமைகள், புத்தாக்க ஸ்காலர்ஷிப் ஆகியவை டாக்டர் பத்மநாபனின் ஆராய்ச்சியில் அவர் ஆர்வம் காட்டுகிற பிரிவு களாக இருக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img