fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா நடத்திய விஜிலன்ஸ் விழிப்புணர்வு நடைபயணம்

சேலத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா நடத்திய விஜிலன்ஸ் விழிப்புணர்வு நடைபயணம்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சேலம் பிராந் திய அலுவலகம் சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது.
மருத்துவ முகாம், மரம் நடுதல் போன்ற சேவைகள் மேற் கொள்ளப்பட்டதோடு கிராமங்களில் முகாம்கள் நடத்தி மக்களிடம் விஜி லென்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அக்டோபர் 27ம் தேதி காலை 11 மணிக்கு ஊழலுக்கு எதிரான உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து நேற்று (அக்.28) விஜிலென்ஸ் விழிப்புணர்வு குறித்து நடைபயணம் வங்கியின் பிராந்திய அலுவலகத்தி லிருந்து புறப்பட்டு சேலம் ரயில்வே ஜங்ஷன் வரை மேற்கொள்ளப்பட்டது.
வங்கியின் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில் குமார், துணை பிராந்திய தலைவர் எம்.என்.மஞ்சுநாத் மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். இதில் யூனியன் வங்கியின் ஊழியர்கள் விஜிலென்ஸ் குறித்த பதாகைகள் பிடித்தபடி, ஊழலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img