இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் மார்ச் 2023 IJMR பத்திரிக்கையில் பதிவான ஆய்வுகளின்படி ஒன்பதில் ஒரு இந்திய ருக்கு அவருடைய வாழ் நாளிலே புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதை வலியுறுத்தி இருக்கின்றது.
ஆண்களில் நுரையீரல் புற்று நோயும் பெண்களில் மார்பகப் புற்றுநோயும் இவற்றில் முதலிடத்தை வகிக்கின்றன.
14 ஆண்டுகளுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கும் கூ டபுற்றுநோய்கள், ரத்தப் புற்றுநோய் போன்றவை அதிகரித்து வருவதை இந்த ஆய்வு காட்டுகின்றது. 2020ம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஐந்து ஆண்டுகளிலே 12.8% புற்றுநோய் இந்தியாவிலே அதிகரித்து இருக்கின்றது கவலைக்குரியதாக இருக்கின்றது.
விஜிஎம் மருத்துவமனை புற்று நோய் விழிப்புணர்வு ஒரு அவசரத் தேவையாக கருதுகின்றது. பொது மக்களின் விழிப்புணர்வு மூலமாக மட்டுமே இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருகின்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
ஆரம்பநிலை புற்றுநோய் விஜிஎம் மருத்துவமனையில் உல கின் அதிநவீன உபகரணங்கள் மூலமாக ஆரம்பநிலை புற்றுநோய் களை தற்பொழுது கண்டறிந்து அறுவை சிகிச்சை இல்லாமலேயே எண்டாஸ்கோப்பி வாயிலாகவே அவற்றை அகற்றி விட முடியும். சமீபத்தில் நடந்த அமெரிக்கன் சொசைட்டி அன்ட்ராலஜி மாநாடு கனடா நாட்டு வான்குவரில் நடந்த பொழுது கேன்சராக மாறக்கூடிய கட்டிகளை எண்டா ஸ்கோப் வாயிலாக அகற்றுகின்ற செயல்விளக்க முறையை பாராட்டி அதற்கு பிரசிடென்ஷியல் அவார்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று மாதங்களில் விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளையின் சார்பாக கிட்டத்தட்ட 5000 கல்லூரி மாணவர்களுக்கு ஆரோக் கிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது அது மட்டுமல்லாமல் ஊடகங்கள் வாயிலாக ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு ஆரோக்கிய வாழ்வினை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை எளிமையான செய்திகுறிப்புகள் மூலமாக தொடர்ந்து பரப்பிக் கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரத்தின் ஒரு முக்கிய அங்கமான மருத்துவத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற விஜிஎம் மருத்துவமனை அரசு மற்றும் தன்னார்வலர் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டாலே இந்த அதிக ரித்துக் கொண்டிருக்கின்ற புற்று நோயை இந்தியாவில் தடுக்க முடியும் என்பதை உறுதியாக நம்புகின்றார்கள்.
உறுதிமொழி உலகபுற்று நோய் தினமாகிய பிப்ரவரி நாலாம் தேதி விஜிஎம் மருத்துவமனையின் ஊழியர்கள் மருத்துவர்கள் மற்றும் யங் இந்தியன்ஸ் மற்றும் கோவை டவுன் டவுன் ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஈஸ்ட் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கட் 186 பிரிவின் ரவுண்டு டேபிள் உறுப்பினர்கள் மற்றும் ரேஸ்கோர்ஸ் நடப்போர் சங்கம் உறுப்பினர்கள் ஆகிய வர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்கின்ற கோவையின் அன்பு பெருமக்கள் அனைவரும் இந்த உறுதிமொழியை உலகபுற்று நோய் தினமாக இன்று ஏற்றுக் கொள்கிறார்கள்.
அதுமட்டுமல் லாமல் இந்த உறுதிமொழியை அவர்களுடைய நண்பர்கள் 10 பெயர்களுக்கு இந்த கருத்தைக் கொண்டு செல்ல ஏற்றுக் கொள்கிறார்கள்.