மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க சார்பாக, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கட்சி அலுவலக வளாகத்தில் கொண்பாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி, துணைச் செயலாளர் சந்தனத்துரை, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முத்து கண்ணன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் படத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட் சுமி ராஜேஷ் கண்ணா மலர் தூவி மரியாதை செய்தார். இதில் ,முன்னாள் கவுன்சிலர்கள் திருப்பதி, சங்கு, அவையன்,முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம், ராமசந்திரன், சாணாம்பட்டி ராஜேந்திரன், ஜோதி, பாலு, வில்லி, குமார், சரவணன், குட்லாடம்பட்டி ராஜேந்திரன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், வேல்முருகன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டியில், அனைத்து வார்டுகளிலும் கொடி ஏற்றி எம் ஜி ஆர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. வாடிப்பட்டி யூனியன் ஆபீஸ் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு , மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
மனித கடவுள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எல்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வார்டு பிரதிநிதி சாலி தாமஸ் காந்தி வரவேற்றார்.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில், உமாதேவி நன்றி கூறினார்.
விராலிப்பட்டி வீர சின்னம்மாள் காளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, வார்டு செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பன்னீர் பொங்கல் வழங்கினார். பூசாரி மூக்கன் சிறப்பு பூஜைகள் செய்தார்.
இதில் நிர்வாகிகள் பழனி, வீர சின்னன், ஜோதி, மஞ்சுளா, ராக்கு, செல்வி, சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டனர். பரவை பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் ராஜா தலைமை தாங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
நிர்வாகிகள் சௌந்தரபாண்டி, நாகமலை, தங்கவேல், முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் கலா மீனா ராஜா அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் ,ஜெயராஜ், ராஜ், சரவணன், மகேஷ்குமார், பிரகாசம், முத்துநாயகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.