fbpx
Homeபிற செய்திகள்அமெரிக்கா வரி விதிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் பேட்டி

அமெரிக்கா வரி விதிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் பேட்டி

இந்திய பொருள் இறக்குமதிக்கு அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை என்று வ.உ.சி துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் ரோஹித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் ரோஹித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் அளித்த பேட்டி:

கடந்த ஆறு மாதத்தில் சரக்கு பெட்டக ஏற்றுமதி 6 முதல் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தூத்துக் குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியான கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்ட எந்த பொருள்களும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு திரும்பி வரவில்லை.

வரும் கல்வி ஆண்டு முதல் கேந்திர வித்யாலயா பள்ளி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் செயல்பட தொடங்கும். இதற்கான இடம் தூத்துக்குடி துறைமுகத்தில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எங்கு, எங்கு தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img