fbpx
Homeபிற செய்திகள்ஐக்கிய ஜமாத் பேரவை சார்பில் குடியரசு தின விழா

ஐக்கிய ஜமாத் பேரவை சார்பில் குடியரசு தின விழா

நாட்டின் 75வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஐக்கிய ஜமாத் கௌரவ தலைவர் வி.எம்.இ. இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் ஹாஜி ஏ.ஜே. முகமது ஷரீஃப் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் கலீபுல்லா காட்டூர் கபர்ஸ்தான் பள்ளிவாசல் இமாம் அபுதாஹிர், இரும்பு கடை பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது இப்ராஹிம் சிராஜி, பொன்விழா நகர் பள்ளிவாசல் இமாம் சிராஜுதீன், ஐக்கிய ஜமாத் பேரவை செயலாளர் அக்பர் அலி துணைச் செயலாளர் எஸ் எம் அய்யூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img