fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் துவக்கி வைத்தார்...

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் துவக்கி வைத்தார் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்தில் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் பசுமை ஹைட் ரஜன் முன்னோடி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலை யில் முன்னோடி திட்டமாக 10 நியுட்டன் கியூபிக் மீட்டர் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை தொடக்க விழா மற்றும் பல்வேறு திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வர வேற்றார். அமைச்சர் கீதாஜீவன், தமிழக பா.ஜனதா தலைவர் நயி னார் நாகேந்திரன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு ரூ.30.80 கோடி முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தும், ரூ.273.73 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச் சர் சர்பானந்தா சோனோ வால் பேசியதாவது:
இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் அனைத்து துறைக ளிலும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடல்சார் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறோம்.
கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்களுக்கு சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.93 ஆயிரத்து 715 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 50 திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சூரிய மின் சக்தி, காற்றாலை திட் டங்கள் மூலம் பசுமை துறைமுகமாக மாறி உள்ளது. தூத்துக்குடி துறை முகம் பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றும் திட்டத்தின் முன்னோடியாக நாட்டி லேயே முதல் துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி முன் னோடி ஆலை திறக்கப்பட்டு உள்ளது. அதுபோல நாட்டி லேயே முதலாவதாக தூத்துக் குடி துறைமு கத்தில் பசுமை மெத்தனால் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்படுகிறது. மேலும் தூத் துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் சிப்காட் நிறு வனத்துடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துள்ளது. இந்த கப்பல் கட்டும் தளம் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனம் விரைவில் உருவாக்கப்படும்.

இந்த திட்டம் மூலம் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டங்களில் கடலோர சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 37 கடல்சார் பயிற்சி நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு 3.3 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக் கப்படுகிறது.
திட்டங்களுக்கு நிலம் எடுத் தும் கொடுக்கும் பணிகள் அனைத்து பணிகளிலும் தமிழக அரசு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கி றேன்.
இவ்வாறு அவர் பேசி னார். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கி யத்துவம் அளித்து வருகிறார். தொழில் வளர்ச்சி என்பது பரவலாக அனைத்து பகுதிகளி லும் இருக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் தீவிர மாக உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு எண்ணற்ற தொழில் வளர்ச்சி முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ளது. தூத் துக்குடி துறைமுகத்திற்கு அதி கமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. வளர்ச்சிக் கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாக மத்திய அமைச்சர், மத்திய அரசு உயர் அதிகாரிகள் பாராட்டி யிருக்கிறார்கள்.
தமிழக அரசு சார்பில் துறைமுகம் மற்றும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய, கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர் வழித் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், சிறப்பு செயலாளர் குமார் சின்கா, தமிழக சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாநக ராட்சி கமிஷனர் பிரியங்கா, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பாஜாக ஓபிசி அணி தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட தலை வர் சித்ராங்கதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
துறைமுகம் ஆணைய துணைத் தலைவர் ராஜேஷ் சவுந் தரராஜன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img