ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனங்களின் தலைமை அலுவலகமான சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஸ்பிக் ஹவுஸில் “வேளாண் சேவை ஊர்த்தி” துவக்க விழாவா நடைபெற்றது.
அந்நிறுவனங்களின் விரிவுபடுத்தப்பட்ட பல்வேறு வேளாண் சேவைகளை விவசாயிகளிடையே காட்சிப்படுத்துவதற்காகவும், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், காணொளித் திரையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “வேளாண் சேவை ஊர்தி”யை அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் நாராயணன் கொடி அசைத்து துவக்கி வேளாண் சேவைக்காக அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வில் அந்நிறுவனத்தைச் சார்ந்த பல்வேறு துறைகளின் தலைமை நிர்வாகிகள், ஏனைய அலுவலர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அந்நிறுவனத்தின் விற்பனை அலுவலர்கள், டீலர்கள், மற்றும் விவசாயிகள் பலரும் இணைய வழியில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இது போன்று மேலும் 6 வாகனங்கள் கூடிய விரைவில் வேளாண் அர்ப்பணிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.