fbpx
Homeபிற செய்திகள்தற்காப்பு விளையாட்டுகளில் வென்ற திரு இருதய பள்ளி மணவர்களுக்கு பாராட்டு

தற்காப்பு விளையாட்டுகளில் வென்ற திரு இருதய பள்ளி மணவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ராஜபாளையம் திரு இருதய மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவர் எம்.சி.அம்பாசங்கர் பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.

ராஜபாளையம் திரு இருதய மெட்ரிகுலேசன் பள்ளி

ராஜபாளையம் திரு இருதய மெட்ரிகுலேசன் பள்ளியில் கராத்தே, ஜூடோ, சிலம்பம், மல்யுத்தம் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோப்பை, கேடயம், மெடல், சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை, தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க தலைவரும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இதனையடுத்து அம்பாசங்கர் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பாடல்கள் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட், அருட்.சகோதரி மரியநேசம், பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி சாராள் ரோஸ், திரு இருதய மெட்ரிக் பள்ளி தாளாளர் மரிய நேசம், மாவட்ட திமுக பிரதிநிதி நெல்சன், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட வூசூ சங்க தலைவர் சூர்யா ராம், தூத்துக்குடி மாவட்ட மல்யுத்த சங்க செயலாளர் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்: சுதர் ஸன், ஆம்ஸ்ட்ராங், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பள்ளி தற்காப்பு கலை ஆசிரியருமான முத்து சங்கர் குமார் மற்றும் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img