fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி யில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் கனிமொழி கருணாநிதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று (21ம் தேதி) காலை சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி எப்சிஐ குடோன் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன் தலைமையில் கனிமொழி கருணா நிதிக்கு திமுகவினர் உற்சாக வர வேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரத்திலுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தேசப்பிதா மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அண்ணல் அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், குரூஸ்பர்னாந்து, இந்திராகாந்தி, கே.வி.கே.சாமி ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img