தூத்துக்குடி மாவட் டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி காட்டுநாயக்கன்பட்டி மற்றும் ஆதனூர் ஊராட்சியில், தூத்துக்குடி வடக்கு திமுக மாவட்ட – ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனி மொழி கருணாநிதி கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை சேர்மன் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ: வெள்ள நிவாரணப் பொருட்கள் கொடுப்பதற்காகக் கனிமொழி கருணாநிதி எம்.பி இங்கு வருகை தந்துள்ளார். குடும்ப அட்டை இருக்கின்றவர்களுக்கும், குடும்ப அட்டையில்லாதவர்களுக் கும் கொடுக்கின்றோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நேரடியாக அவரே சென்று நிவாரணப் பொருட்களைக் கொடுக்கிறார். இரண்டு நாட்களாக கனிமொழி எம்.பி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை, அவர்களால் சரியாகப் பேச முடியாது. இருந்தாலும் கூட தொடர்ந்து மக்களைச் சந்திப்பதிற்காக இங்கு வந்துள்ளார், என்று கூறினார்.