fbpx
Homeபிற செய்திகள்மாப்பிள்ளையூரணி தன்னிறைவு பெறும் நிலையை எட்டி வருகிறது

மாப்பிள்ளையூரணி தன்னிறைவு பெறும் நிலையை எட்டி வருகிறது

தூத்துக்குடியை அடுத்த மாப்பிள்ளையூ ரணி ஊராட்சியில் நேற்று சிறப்பு :கிராம சபை கூட் டம் நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் முறையாக எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், மக்களின் அடிப் படை தேவைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிந்து வருகிறது. இதனால் தன்னி றைவு பெறும் நிலையை எட்டி வருகிறது.

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த முதல்வருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் துணை நிற்க வேண்டும், என்றார்.
அரசு உத்தரவுயடி தூய்மை காவலர்களை கௌரவிக்கும் விதமாக கூட்டத்தில் அவர்களுக்கு தலைவர் சரவண குமார் சால்வை அணி வித்து பாராட்டினார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட தி.மு.க., சுற்று சூழல் அணி அமைப்பாளர் ரலி (ஏ) பொன் பாண்டி, ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img