fbpx
Homeபிற செய்திகள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஒட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளர் உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஒட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளர் உதவி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு ஆவரங்காடு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 127 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களையும் ஆடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான வே.காசி விஸ்வநாதன் வழங்கினார்.

நிகழ்வில் தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி ‘ சுப்பிரமணியன் அய்யாத்துரை முத்துராஜ், விக்கி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கா.மணிராஜ், செயலாளர் கி.லட்சுமணன், இளைஞரணி மகேஷ், சண்முகராஜ், கருப்பசாமி, ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img