தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 116 வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த மாட்டு வண்டி போட்டியானது எட்டையபுரம் விளாத்திகுளம்- சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிசிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
முதலாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை எம்எல்ஏ மார்கண்டேயன் மற்றும் நகர முக்குலத்தோர் சங்க தலைவர் கார்த்திக் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில்பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டு வண்டி 21 மற்றும் பூஞ்சிட்டு பந்தயத்தில் 32 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டுவண்டியில் முதலாவதாக 2 பவுன் தங்கச் செயின் பரிசாக மெடிக்கல் விஜயகுமார் சண்முகாபுரம் மாட்டு வண்டியும், இரண்டாவதாக ஒன்றரை பவுன் தங்கச் செயின் மெடிக்கல் விஜயகுமார் சண்முகபுரம் மாட்டு வண்டியும், மூன்றாவதாக ஒரு பவுன் தங்கச் செயின் திண்டுக்கல் அய்யம்பாளையம் மாட்டு வண்டியும் தங்கச் செயின்களை பரிசாக பெற்றன.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதலாவதாக ஒரு பவுன் தங்க செயின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டியும், இரண்டாவதாக முக்கால் பவுன் தங்க செயின் ஐயங்கார் பேக்கரி துரைச்சாமிபுரம் மாட்டு வண்டியும், மூன்றாவதாக அரை பவுன் தங்கச் செயின் சீவலப்பேரி மாட்டு வண்டியும் தங்க செயின்களை பரிசாக பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கு வெள்ளிதார்கம்பு சாரதிகளுக்கு கிடாய் மற்றும் ரொக்க பணம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.