கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட் ராக்ட் கிளப் சார்பில், “கனா” ஒரு மாபெரும் கனவு என்ற நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். ரோட் ராக்ட் கிளப் மாணவ தலைவர் குணா வரவேற்று பேசினார்.
இதன்படி, ரோட்ராக்ட் கிளப் மாணவர்கள் கல்விக் கட்டணம் தேவைப்படும் குழந்தைகளுக்காக திரட்டிய நிதியை, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ராஷ்மிகா, ஸ்ருதிகா ஆகியோருக்கு வழங்க முடிவு செய்தனர்.
ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஓராண்டுக்கான முழு கல்விக் கட்டணத்தையும், மாணவிகளின் பெற்றோரிடம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கார்த்திகா, எம்.ஸ்ரீதர் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.