சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில், சாலையோரம் ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் அலுவலகம் முகப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாநகர துணைச் செயலாளர் தா.நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடனிருந்தோர் எஸ் ஆர் ராஜேந்திரன், குணா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.