fbpx
Homeபிற செய்திகள்பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி

பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி

பட்டுப்புழுவியல் துறை மாணவியர், கிராமப்புற பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்ந்த மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பட்டுப்புழுவியல் துறையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர், ஜேன் ஜெனிஷா, மங்கையகரசி, சபியா சுல்தானா, சிவரஞ்சனி, சன்மதி, உச்சிமகாளி ஆகியோர், ஊரக வேளாண் பயிற்சி அனுபவத்திற்காக கிருஷ்ணகிரியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியில், வெட்டப்பட்ட பொருட்கள் கொள்முதல், வெட்டும் முறைகள், சாயமிடுதல் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் சந்தைப்படுத்தல் பற்றி கற்பித்தனர். இதில், பட்டு கூடுகள் மூலம் பூ மாலை, மலர் கொத்து, அலங்காரப் பொருட்கள், அணிகலன்கள் செய்முறைகளை விளக்கினர். மேலும் இதன் நன்மைகளை கூறி பெண்களிடம் ஆர்வத்தை தூண்டினர். இதில், இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img