fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி - ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி – ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு

தமிழகத்தில் நாடாளு மன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத் தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2, 222 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10,970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஓரிடத்தில் முதல் கட்ட பயிற்சி நடந்தது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் டாக் டர் ஆர்ஏஎன்எம் கலை அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மேற்கு தொகு திக்கு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையமும், மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை -சென்னிமலை சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பவானி தொகுதிக்கு பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூர் தொகுதிக்கு அந்தியூர் மங்கலம் மேல்நிலை பள்ளியிலும், கோபி தொகுதிக்கு மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியிலும், பவானிசாகர் தொகுதிக்கு சத்திய மங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும் முதற்கட்ட பயிற்சி நடந்தது.

கோபி சாரதா பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது வாக்குப்பதிவின் போது கையாளும் வழிமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் சத்தியமங்க லத்தில் உள்ள காமதேனு கல்லூரியில் நடைபெற்ற அலுவலருக்கான பயிற்சி யில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அடுத் தடுத்து நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img