fbpx
Homeபிற செய்திகள்ட்ரெய்லர் லாரி உரிமையாளர் சங்க புதிய நிர்வாகிகள் - தலைவராக தாமோதரன் தேர்வு

ட்ரெய்லர் லாரி உரிமையாளர் சங்க புதிய நிர்வாகிகள் – தலைவராக தாமோதரன் தேர்வு

இந்தியாவில் ட்ரெய்லர் லாரிகள் அதிகம் இருக்கும், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் செயல்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் இச்சங்கத்தின் கிளைகள், திருச்சி, ராணிப்பேட்டை, கோவை, பெங்களூரு, கொச்சின், வைசாக் போன்ற இடங்களில் உள்ளன. இச்சங்கத்தில், 2,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த சங்கத்தின் 2025-28ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஜூலை 20 தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது. தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளான 7 பதவிகளுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.

40 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 80 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 47 பதவிகளுக்கு 95 பேர் போட்டியிட்டனர்.

இதில் தற்போதைய தலைவர் சின்னுசாமி தலைமையிலான ஒரு அணியும் செயலாளர் தாமோதரன் தலைமையிலான இன்னொரு அணியும் மோதினர். ஒட்டுப் பதிவில் மொத்தம் 2,273 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். பதிவான ஓட்டுகள், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தாமு என்கிற தாமோதரன் வெற்றி பெற்றார். உபதலைவர் பதவிக்கு செல்வம் என்கிற செல்வகுமார், துணைத் தலைவர் பதவிக்கு ரமேஷ், செயலாளர் பதவிக்கு ராஜா என்கிற ராஜேந்திரன், இணை செயலாளர் பதவிக்கு பரமசிவம், துணை செயலாளர் பதவிக்கு ரமேஷ் என்கிற விஜய், பொருளாளர் பதவிக்கு ஆனந்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

புதிய நிர்வாகிகளிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவருமான அருள், முன்னாள் தலைவர் வாங்கிலி, எல்பிஜி சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் வழங்கினர்.

மேலும் தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு விபரம் திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு அவர்களது ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் குழுவினர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img