fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவையில் போக்குவரத்து மாற்றம்

அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:- அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் வழியாக டைடல் பார்க் சென்று அவினாசி ரோட்டை அடையலாம் அல்லது கொடிசியா வழியாக அல்லது காளப்பட்டி வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

சிங்காநல்லூரிலிருந்து அவினாசி ரோடு செல்பவர்கள் காமராஜர் சாலை வழியாக செல்லாமல் சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர், லி&ஜி பைபாஸ் சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

வாகனங்களைப் பயன்படுத்துவோர் சத்தி சாலை மற்றும் திருச்சி சாலையைப் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தி அவினாசி சாலையில் பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கோவை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img