fbpx
Homeபிற செய்திகள்எறிபந்து போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம்

எறிபந்து போட்டியில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் புதுக்கோட்டை எம் ஆர் எம் பள்ளியில் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர் களுக்கான எரிபந்து போட்டிகள் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதிவரை நடைபெற்றன. இதில் தமிழகத்திலிருந்து 38 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் தூத்துக்குடி கமாக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 12 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடிய கமாக் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் இறுதி போட்டியில் சென்னை மாவட்டத்தை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் பாரட்டு சான்றிதழ்களை ஆறு மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர்கள் வழங்கினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்று தூத்துக்குடி வந்த மாணவர்களுக்கு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெற்றோர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அணியின் உடற்கல்வி இயக்குனர் இசக்கி துறை மற்றும் பயிற்சியாளர் செல்வம் ஆகியோருக்கு பெற் றோர்கள் சார்பில் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் பாராட்டுகளை தெரிவித்த னர். பாராட்டு நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர்கள் காசி ராஜன், கண் ணன் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img