fbpx
Homeபிற செய்திகள்சத்தியமங்கலத்தை தலைமையிடமாக புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

சத்தியமங்கலத்தை தலைமையிடமாக புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

துறை நிர்வாகிகள் ச.அ.ஜஹாங்கீர், அப்சல், எம்.ஜூபைர் அகமது, ம.முகமது அர்சத், மக்பூல், அய்யூப்கான் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை புதிய தலைவர் முஹம்மது ஆரிப்க்கு வாழ்த்து தெரிவிப்பது, முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ஜெ.அஸ்லம் பாஷாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும், இவிஎம் எந்திரங்கள் மூலம் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும், ஈரோடு மாவட்டத்தை இரண்டாக பிரித்து சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும்.

இது தாளவாடி, பருகூர் மலைப்பகுதி வளர்ச்சிக்கு உதவும்.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்வதற்காக 1925- ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மலைப்பாதை உள்ளது. இதில் கனரக வாகனங்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

அடிக்கடி கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அங்கு கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அதிநவீன எந்திரங்கள் கொண்டு சுரங்கம் அமைத்து நான்கு வழி சாலை அமைக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img