fbpx
Homeபிற செய்திகள்வாக்குப்பதிவு இயந்திரங்கள், இருப்பறைகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள், இருப்பறைகளை திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவி நாசி மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அவிநாசி
மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு பகுதி களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்கள்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி மஹாராஜா கல்லூரி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்
மின்னணு இயந்திரங்கள் இருப்பறைகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஷ் மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img