fbpx
Homeபிற செய்திகள்‘திருக்குறளை பாடத்திட்டத்தில் இணைத்தவர்’: அவினாசிலிங்கம் நினைவுச் சொற்பொழிவில் புகழாரம்

‘திருக்குறளை பாடத்திட்டத்தில் இணைத்தவர்’: அவினாசிலிங்கம் நினைவுச் சொற்பொழிவில் புகழாரம்

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் தி.சு.அவினாசிலிங்கத்தின் 31-வது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நேற்று (நவ.21) நடந்தது.

பல்கலை துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் வரவேற்றார். ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது: செய்யும் வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அவினாசிலிங்கம்.

எளிமை வாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, இராம கிருஷ்ணா பரமஹம்சரின் நெறிகளை பின்பற்றியவர். அவரைப் போலவே நாமும் நம்மால் முயன்றவரை நற் செயல்களை செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் பேசும்போது, தோன்றின் புகழோடு தோன்றுக என்ற வள்ளுவரின் வாக் கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் அவினாசிலிங்கம்.

அன்பே உருவான அவர் தியாக மனப்பான்மையும் ஆன்மிகச் சிந்தனையும் மிக்கவர். சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நாட்டிற்காக உழைத்த நல்லவர். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை உணர்ந்த அவர், அனைவருக்கும் கல்வி வழங்க வித்யாலயம், சாரதாலயம் என்னும் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், கதராடை அணியும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், திருக்குறளை பாடத்திட்டத்தில் இணைத்தார்.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் பணியாற்றினார். கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெருமைக்குரியவர். அவர் தமது சாதனைகளின் மூலம் பல விருதுகளைப் பெற்றதோடு, மக்களின் வாழ்வுயர நற்கருத்துக்களுடன் கூடிய பல நூல்களையும் இயற்றினார் என்றார்.

வேந்தர் முனைவர் ச.ப.தியாகராஜன்

வேந்தர் முனைவர் ச.ப.தியாகராஜன் பேசும்போது, அவினாசிலிங்கத்தின் வாழ்நாள் சரித்திரமான அருளின் ஆற்றல் என்ற நூலை வாசிக்க வேண்டும் என்று குறிப் பிட்டார்.

ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக வாழ்நாள் அறங்காவலர் முனைவர் க.குழந்தைவேல் பேசுகையில், குழந்தைப் பருவத்தில் இருந்து நாட்டுப்பற்றோடு திகழ்ந்தவர்.

சுவாமி விவேகானந்தர், காந்தியடிகளின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப் பட்டவர். வாழ்க்கையையே சமூகத்திற்காக அர்ப்பணித்தவர். பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் கல்விக்காக சாரதாலயத்தை நிறுவிய மாமனிதர் என்றார். பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img