தென்காசி – கீழப்புலியூர் ஆர்சி துவக்கப்பள்ளியில் 77வது வருட ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
கீழப்புலியூர் ஆர்சி துவக்கப்பள்ளியில் 77வது வருட ஆண்டு விழா நிகழ்ச்சி (20.03.2024) புதன்கிழமை அன்று
தென்காசி வட்டார கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன் தலைமையில் வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், தென்காசி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரஸ்வதி பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜம் முன்னிலையில் நடைபெற்றது. அருட்திரு. முனைவர் போஸ்கோ குணசீலன் அடிகளார் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் மேரி கரோலின் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் இமாகிளைட் மேரி தொகுப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, தென்காசி உதவி பங்கு தந்தை அருட்திரு.மார்ட்டின்,
வீரமாமுனிவர் பள்ளி தலைமையாசிரியர் செசிலி, முன்னாள் தலைமை ஆசிரியர் கிளிட்டஸ், முன்னாள் மாணவியும், ஆசிரியருமான சுப்புலெட்சுமி, 22வது வார்டு உறுப்பினர் இராமசுப்பிரமணியன், முன்னாள் வார்டு உறுப்பினர் கருப்பசாமி, 7வது வார்டு சார்பில் முரளி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவர்களது கலைநிகழ்ச்சிகளும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பரிசுப்பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் மிக்கேல் ராணி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் கஸ்தூரி, நல்லமங்கை, மகேஷ்வரி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.