சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. நிகழ்வில் தேனி சிக்னல் அருகே வைக்கப்பட்டிருந்த பால் தாக்கரே மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் திருவருவபடத்திற்கு சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குரு ஐயப்பன் ஜி தலைமையிலான கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.