தேனி மாவட்ட நாயுடு மகாஜனம் சங்கம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265- வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தேனி காவல் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு நாயுடு மகாஜனம் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர்.
நிகழ்வில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த முன்னாள் நாயுடு சங்க தலைவர் ராஜாராம் நாயுடு, கௌரவத் தலைவர் நாராயணசாமி, பிசி பட்டி நாயுடு சங்க தலைவர் வீரராஜ், தேனி மாவட்ட நாயுடு சங்க செயலாளர் சுப்ராம், தலைவர் பாலகுரு, பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய் திருந்தனர்.