fbpx
Homeபிற செய்திகள்தேனி மக்கள் குறைதீர்க்கும் நாளில் 345 மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

தேனி மக்கள் குறைதீர்க்கும் நாளில் 345 மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (5ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டு மனைப் பட்டா, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 345 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றார். பின்னர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக, தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000-, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 1,32,000-க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாப் போட்டியில் செதுக்குச் சிற்பம் பிரிவில் முதலிடம் பெற்ற இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் யோககேஸ்வரன் என்ற மாணவனுக்கு பாரட்டுச் சான்றிதழினையும், வாழ்த்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், 2022-ஆம் ஆண் டிற்கான கொடிநாள் வசூல் தொகை இலக்கினை பூர்த்தி செய்தமைக்கு கம்பம் நகராட்சி ஆணையாளருக்கும், தேனி வட்டாட்சியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட் சித்தலைவர் வழங்கினார்.

சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் சச்சின் என்ற மாணவன் ஜுடோ போட்டியில் வெற்றி பெற்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

ஜுடோ போட்டியில் 5 மற்றும் 7-ஆம் இடங்களை பிடித்து பதக்கங்களை வென்ற சுர்தி, நிஷாந்தினி ஆகியோரும் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முக மதிஅலி ஜின்னா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலு வலர் இந்துமதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img